தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இப்போதே தெரிந்துவிட்டது… அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திரா தாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 11:49 AM IST

2024ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானது ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ளது மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இப்போதே தெரிந்துவிட்டது என அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திரா தாஸ்
அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திரா தாஸ்

அயோத்தி:2024 புத்தாண்டின் முதல் நாளில், அயோத்தி ராமர் கோயிலின் தலைமை மதகுரு ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ராம ராஜ்ஜியம் மறுமலர்ச்சி அடைந்துள்ளதாகவும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிகிறது என கணித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய ராமர் கோவில் தலைமை மதகுரு ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், 'இந்த 2024ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானது. அயோத்தி ராமர் கோயில் கருவறையில் 'ராமர்' அமரவுள்ளார். கூடவே, 2024 நாடாளுமன்ற தேர்தல் என இரண்டும் சுபமாக நடைபெறும். ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அனைவருக்கும் எனது 2024 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மரபுகளின் படி ஹோலி பண்டிகை, ராம நவமி, புத்தாண்டு, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் ராமர் சிலைக்கு சிறப்பு ஆராதனை செய்யப்படும். ராமர் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பலகாரங்கள் லக்னோவில் உள்ள பழம்பெரும் கடையில் ஸ்பெஷலான முறையில் செய்யப்பட்டு வரவழைக்கப்படுகிறது” எனக் கூறினார்

இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் புத்தாண்டையொட்டி, மஞ்சள் மற்றும் நெய் கலந்த அக்‌ஷதை வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை வழங்கப்படும் என அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஏராளமானோர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சரயூ நதியில் புனித நீராடினர். அதேபோல், ராமர் கோயில் மற்றும் ஹனுமன்கார்கி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வருகை புரிந்து, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம், புதியதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கடந்த ஆகஸ்ட் 5, 2020ஆம் ஆண்டில் அயோத்தி ராமர் கோயிலுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி 1992ஆம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது அப்பகுதியில் மதக் கலவரத்தை தூண்டியது. ராமர் கோயில் கட்டியதற்கு பிறகு அயோத்தியில் அமைதி திரும்பியுள்ளதா என்ற கேள்விக்கு, மதகுரு சத்யேந்திர தாஸ், அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிறகு பல்வேறு புதிய வளர்ச்சிகளை கண்டுள்ளது. விமான நிலையம், புதிய ரயில் நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

இதையும் படிங்க: 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி..!

ABOUT THE AUTHOR

...view details