தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் பப்ஜி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

பப்ஜி விளையாடுவதை தவிர்த்து, படிப்பில் கவனம் செலுத்துமாறு, தந்தை அறிவுறுத்திய நிலையில், மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் அரங்கேறி உள்ளது.

தெலங்கானாவில் பப்ஜி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
தெலங்கானாவில் பப்ஜி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

By

Published : Aug 4, 2023, 9:48 AM IST

கரீம் நகர்: தெலங்கானா மாநிலம் கரீம் நகர் ருக்மாபூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். பள்ளிப்படிப்பை நிறைவு செய்து உள்ள ரமேஷ், இஞ்ஜினியரிங் கல்லூரியில், முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ளார். வகுப்புகள் இன்னும் துவங்கவில்லை.

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி இருந்த ரமேஷ், எந்நேரமும், அதிலேயே அதிலேயே மூழ்கி இருந்தார். கல்லூரி வகுப்புகள் இன்னும் துவங்காததால், வீட்டிலேயே, எப்போதும் பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்தான்.

இந்நிலையில், சம்பவ நாளன்று, காலை, ரமேஷ் வழக்கம்போல, பப்ஜி விளையாட்டில் மூழ்கி இருந்தான். அதனைக் கண்ட தந்தை அஞ்சையா, அவனைக் கண்டித்து உள்ளார். இஞ்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டாய், இன்னும் இந்த விளையாடிக் கொண்டு இருக்கிறாயே என்று, ரமேஷை கண்டித்து உள்ளார். அதுமட்டுமல்லாது, படிப்பில் கவனம் செலுத்துமாறு, அறிவுறுத்தி உள்ளார். பின் வழக்கம்போல், அவர் தமது அன்றாட பணியான விவசாய பணிகளை மேற்கொள்ள சென்று விட்டார்.

தந்தை கண்டித்ததால், விரக்தியில் இருந்த ரமேஷ், தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், விரைந்து செயல்பட்டு, ரமேஷை, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ரமேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, கரீம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய இளம் தலைமுறையினர், பெற்றோர் கண்டித்தல், தேர்வில் தோல்வி உள்ளிட்ட விஷயங்களுக்கு எல்லாம், தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு, சமீப காலமாக, அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு, இதுகுறித்த முறையான, உளவியல் ரீதியான கலந்தாலோசனை கொடுக்க வேண்டியது முக்கியம் ஆகும்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல. ஒருவேளை, உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினாலோ அல்லது அதுகுறித்த சந்தேகங்கள் ஏற்பட்டாலோ, வாரத்தின் 7 நாட்களும்,. 24 மணி நேரமும் இடைவிடாது செயல்படும் சினேகா அறக்கட்டளையின் 044- 24640050 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும்.டாடா நிறுவனத்தின் 9152987821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை பெறலாம்.

இதையும் படிங்க: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details