தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் 5 நாள்களில் 755 சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க உத்தரவு - தெலங்கானாவில் கரோனா தொற்று பரவல்

ஹைதராபாத்: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், 114 மருத்துவமனைகளில் 755 சுகாதாரப் பணியாளர்களைப் போர்க்கால அடிப்படையில் சேர்க்க தெலங்கானா அரசு நேற்று முடிவுசெய்துள்ளது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

By

Published : Apr 26, 2021, 1:34 PM IST

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.

இந்நிலையில் தெலங்கானாவில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக, மக்களுக்கு சரியான, தரமான மருத்துவச் சேவையை வழங்க 114 மருத்துவமனைகளில் போதுமான பணியாளர்களை நியமிக்க அம்மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன்படி, 144 மருத்துவர்கள், 527 செவிலியர், 84 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 755 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர். இதனால் அம்மாநிலத்தின் கருவூலத்தில் ரூ.9.02 கோடி செலவு ஏற்படும்.

அவசரகால சூழ்நிலை காரணமாக சிறப்பு ஆள்சேர்ப்பு இயக்கத்தை ஏற்பாடு செய்யவும், நேர்காணல்களை நடத்தவும், நியமன பணிகளை ஐந்து நாள்களில் முடிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details