ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகனை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மகபூப்நகர் போலீசார் தரப்பில், ஹன்வாடா பகுதியை சேர்ந்த தயாம்மா-பப்பையா தம்பதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள், வெங்கடேசன் (29) என்ற மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பப்பையா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தயாம்மா அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவருடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார். நாளாடைவில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை பல ஆண்டுகளாக தயாம்மாவின் மகன் வெங்கடேசன் கண்டித்துவந்துள்ளார். இதனால் சீனிவாஸுக்கும் வெங்கடேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி வெங்கடேசன் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மொட்டுகுலகுண்டா ஆற்றில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து மிதந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.