தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமஸ்தான் நாராயன்பூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் மதுபான பார்ட்டி நடப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர், பெண்கள் உள்ளிட்ட 90 பேரை கைது செய்தனர்.பண்ணை வீட்டின் உரிமையாளரான தன்வான்த் ரெட்டி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
'நைட் பார்ட்டி' போலீஸ் ரெய்டில் 90 பேர் கைது! - சமஸ்தான் நாராயன்பூர் கிராமம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் சட்டவிரோதமாக நடைபெற்ற மதுபார்ட்டியில் கலந்துகொண்ட 90 பேர், கைது செய்யப்பட்டனர்.
நைட் பார்ட்டி
இந்த சோதனையில் 400 கிராம் கஞ்சா, மதுபான பாட்டில்கள், கேமராக்கள், ஸ்மார்ட்போன்கள், கார், பைக், மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:டெல்லியில் ஏமாற்றம்... பணமின்றி 1,200 கிமீ தண்டவாளத்தில் நடந்த முதியவர்!