ஹைதராபாத்: சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பொதுநல அமைப்பு உலக பொருளாதார மன்றம் ஆகும். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்து நகரின் தாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முக்கியமான அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உள்ளனர்.
சர்வதேச அரசியல், கரோனாவால் சரிந்த உலகப் பொருளாதாரம், மக்கள் சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஆலோசிக்கப்பட உள்ளன. ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தின் முதல் 30 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
நடப்பாண்டுக்கான அதிக செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இரு இந்திய அரசியல்வாதிகள் மதிப்புமிகு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில், தெலங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் தெலங்கானா முதலமைச்சரின் மகனுமான கே.டி.ராமா ராவ் 13ஆவது இடம் பிடித்துள்ளார்.