தெலங்கானா: செகந்திராபாத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில், ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, தட்சின் பாரத் பகுதியின் ராணுவ மருத்துவமனைக்கான ஜெனரல் ஏ அருண் GOC (GENRAL OFFICER COMMANDING) நேற்று (ஜூன்.19) திறந்து வைத்தார்.
ஆக்ஸிஜனை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு (CSR) Corporate Social Responsibility முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆலை ராணுவ மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது என்று பாதுகாப்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.