ஹைதராபாத்: ஆந்திர- தெலங்கானா பிரிவின் போது அமைக்கப்பட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி (பிசிசி) கட்சியில் இருந்து 12 தெலங்கானா தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்று (டிச.19) அதிகாலையில் கட்சியின் தலைவரிடம் 12 உறுப்பினர்களும் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். மேலும் கட்சியில் இருந்த மூத்த கட்சி விசுவாசிகளை விடுத்து புதிய உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழும்பியதையடுத்து இந்த ராஜினாமா நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.சி.ஆரை பதவி நீக்கம் செய்ய வலுவான போராட்டம் தேவை எனவும் கூறியுள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்களில் தெலங்கானா எம்எல்ஏ சீதக்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.