இதுதொடர்பாக மூத்த சட்ட ஆலோசகர் மச்சர்லா ரங்கய்யா கூறியதாவது:
மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி சந்திர பிராகாஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் மூன்று வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, மாநிலத்தில் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும், பொதுமக்கள் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும், கரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், இதுதொடர்பாக நவம்பர் 19ஆம் தேதி தெலங்கானா அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.