ஹைதராபாத்:நிஜாம்கள் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ஆம் தேதி, ஒருங்கிணைந்த இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஹைதராபாத் இணைக்கப்பட்ட தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 17ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை ஓராண்டுக்கு, "ஹைதராபாத் சுதந்திர தினம்" கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.
வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி "தேசிய ஒருமைப்பாட்டு தினம்" ஆக கொண்டாடப்படும் என்று தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.