தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெண்கல வீராங்கனையை வாழ்த்திய தெலங்கானா ஆளுநர் - Telangana governor Tamilisai wishes P V Sindhu

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற பி. வி.சிந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் வாழ்த்து பெற்றார்.

வெண்கல வீராங்கனையை வாழ்த்திய தெலங்கானா ஆளுநர்
வெண்கல வீராங்கனையை வாழ்த்திய தெலங்கானா ஆளுநர்

By

Published : Aug 9, 2021, 9:38 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியா சார்பில் விளையாடிய பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனைத் தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை பி.வி. சிந்து நேற்று (ஆகஸ்ட். 8) தெலங்கானா ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அவருக்கு தமிழிசை நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

வெண்கல வீராங்கனையை வாழ்த்திய தெலங்கானா ஆளுநர்

மேலும் பி.வி. சிந்துவின் பயிற்சியாளர் பார்க் டே சங்கிற்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்ததாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழா: வண்ணமய கொண்டாட்டங்களுடன் விடைபெற்ற வீரர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details