தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே பிரச்சினைதான்’ - தமிழிசை சௌந்தரராஜன் - தமிழிசை சவுந்தர்ராஜன்

சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே பிரச்சினைதான், தீட்ச்சதர்கள் மற்றும் மக்களுடைய பிரச்சினைகளை சிவன் தான் தீர்க்க வேண்டும், தன்னை அவமானப்படுத்தியதாக எழுந்த கேள்விக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே பிரச்சனைதான் - தமிழிசை சவுந்தர்ராஜன்
சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே பிரச்சனைதான் - தமிழிசை சவுந்தர்ராஜன்

By

Published : Jul 7, 2022, 10:40 AM IST

புதுச்சேரி:புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் நேற்று (ஜூலை 6) காலை பங்கேற்றார். அங்கு அவர் அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இது குறித்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்துள்ளார்.

‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் என்னிடம் ஒருவர் வந்து இந்த இடத்தில் உட்கார வேண்டாம் வேறொரு இடத்தில் உட்காருங்கள் என்றார். நான் ஏற்கவில்லை, இறைவனை பார்க்க வந்துள்ளேன் இங்குதான் உட்காருவேன் என்றேன், அவர் போய் விட்டார். அதை நான் பெரிதாக நினைக்கவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே பிரச்சினையாகவே உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், “சிதம்பரத்தில் உள்ள சிவன் தான் தீட்சிதர்கள் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும், மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும்” என சிரித்தபடியே கூறினார். இந்நிலையில் சிதம்பரம் கோயிலில் அடிக்கடி ஏற்படும் சர்ச்சைகளின் வரிசையில், தமிழிசையும் அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இது குறித்த அவரின் விளக்கம் மூலம் அனைத்து சச்சரவுகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே பிரச்சனைதான் - தமிழிசை சவுந்தர்ராஜன்

இதையும் படிங்க:மாநிலங்களவையில் ஒலிக்கவுள்ள இளையராஜாவின் குரல்.. தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details