தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தங்கம் வென்று வா- மதுரை ரேவதிக்கு தமிழிசை வாழ்த்து - தமிழிசை

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை ரேவதிக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tamilisai greets olympian revathi
tamilisai greets olympian revathi

By

Published : Jul 6, 2021, 2:17 PM IST

ஹைதராபாத் : தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தங்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டும்” என வாழ்த்தியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும், “தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி, ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்காக கலந்துகொள்ள உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழச்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details