ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 30 அன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. இந்த நிலையில், இம்மாநிலம் கடந்த 2014ஆம் ஆண்டு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே ஆட்சியிலிருந்து சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரியச் சமிதி (BSR) கட்சிக்கும் இந்த தேர்தல் பின்னடைவைத் தரலாம் எனக் கூறப்படுகிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி கம்மாரெட்டி சட்டமன்ற தொகுதியில் சந்திரசேகர் ராவை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் அங்கு அவர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
கம்மாரெட்டி, கஜ்வால் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சந்திரசேகர் ராவ் போட்டியிட்ட நிலையில் இரண்டு சுற்று வாக்குகள் எண்ணிக்கையில் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். கஜ்வாலில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.