தெலங்கானா மாநிலம் ஆசிப் நகரில் பிளாக் பக் என்ற மான் வகையை சிலர் வேட்டையாடுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
பிளாக் பக்கை கடத்த முயன்ற மூன்று பேர் கைது - பிளாக் பக்
ஹைதராபாத்: பிளாக் பக் சார்ந்த மான் வகையை கடத்த முயன்ற மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பிளாக் பக்
அப்போது, அங்கு மூன்று பேர் சட்டவிரோதமாக பிளாக் பக் மானை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. உடனே காவல் துறையினர், அவர்களை பிடித்து பிளாக் பக்கை மீட்டனர். தொடர்ந்து அவர்களைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே இந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Last Updated : Mar 9, 2021, 10:55 PM IST