ஐதராபாத் :பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி இரவு எரவெள்ளியில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடது இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளதால் சிறிது காலத்திற்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பிலும், கேசிஆரின் மகன் கே.டி. ராமாராவ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சந்திரசேகர ராவை, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.