தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொதுக்கூட்டத்திற்கு சென்ற தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்....விஜயவாடா சாலையில் போக்குவரத்து நெரிசல் - முதலமைச்சர் கான்வாய்

தெலுங்கானா முதலமைச்சர் கான்வாய் செல்வதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஹைதராபாத்- விஜயவாடா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வருகையால் ஸ்தம்பித்த போக்குவரத்து...மணிக்கணக்கில் மக்கள் அவதி
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வருகையால் ஸ்தம்பித்த போக்குவரத்து...மணிக்கணக்கில் மக்கள் அவதி

By

Published : Aug 20, 2022, 7:46 PM IST

ஹைதராபாத்(தெலுங்கானா):முனுகோடு பகுதியில் நடைபெறும் பிரஜா தீவேனா கூட்டத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் இன்று சென்றார். முதல்வர் கான்வாய் வருவதால் மக்கள் அவ்வழியாக செல்லக்கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் ஹப்சிகுடா முதல் யாதாத்ரி மாவட்டம் சௌடுப்பல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எல்.பி.நகரில் மின்கம்பிகள் சரிந்ததால் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில மணித்துளிகளில் கடந்து செல்லும் முதலமைச்சர் கான்வாய்க்காக மணிக்கணக்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இந்த பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வருகையால் ஸ்தம்பித்த போக்குவரத்து...மணிக்கணக்கில் மக்கள் அவதி

மேலும் இந்த போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் இருந்தது. அலுவலகத்திற்கு செல்லும் மக்கள், அலுவலகம் முடிந்து செல்லும் மக்கள் பள்ளி குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:சுமார் 45,000 கி.மீ. கடல் பயணத்தை தொடங்கிய ஐஎன்எஸ்வி தாரிணி கப்பல்

ABOUT THE AUTHOR

...view details