ஹைதராபாத் (தெலங்கானா): கரோனா இரண்டாம் அலை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு கட்ட பொதுமுடக்க நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வந்தன.
இதுவரையிலான ஊரடங்கு
தெலங்கானா அரசு, கடந்த மே மாதம் 12ஆம் தேதி முதல் மே 21ஆம் தேதிவரையிலான பத்து நாள்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது. அப்போது காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டும் பொதுமக்கள் அன்றாட நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மே 22ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜூன் 11ஆம் தேதியில் இருந்து ஜூன் 19ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
முழு கட்டுப்பாட்டில் கரோனா
தற்போது தெலங்கானாவில் கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமயில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு குறித்து இன்று (ஜூன் 19) ஆலோசனை நடத்தப்பட்டது.
நோ லாக்டவுன்
இக்கூட்டத்திற்கு பின்னர், ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கரோனா பரவல் முழு கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் அளித்த பரிந்துரையின் மூலம் ஊரடங்கை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான விதிமுறைகளையும் முழு அளவில் நீக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவசேனா நிறுவனத் தினம் - 7 மணிக்கு தாக்கரே உரை!