தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காருடன் எரித்துக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்: தெலங்கானாவில் கொடூரம்!

தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக முக்கியப் பிரமுகரும் தொழிலதிபருமான ஸ்ரீனிவாச பிரசாத் இன்று (ஆகஸ்ட்.11) படுகொலை செய்யப்பட்டார்.

BJP leader
BJP leader

By

Published : Aug 11, 2021, 12:21 PM IST

தெலங்கானா: பாஜக முக்கியப் பிரமுகரும் தொழிலதிபருமான ஸ்ரீனிவாச பிரசாத் மேடக் மாவட்டத்தில் இன்று (ஆக.11) அதிகாலை வேளையில் காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது, ஸ்ரீனிவாச பிரசாத்தின் காருக்கு தீவைக்கப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அங்கு எரிந்த நிலையில் இருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் உடலை காரிலிருந்து மீட்டனர்.

வழக்குப் பதிந்து விசாரணை

ஸ்ரீனிவாச பிரசாத்தின் உடல் தற்போது உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இ.பி.கோ. 302 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் காவலர்கள் ஆய்வு

மேலும், இந்தக் கொலை சொந்தக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதா அல்லது அரசியல் விரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாக மேடக் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஓபிசி இடஒதுக்கீடு: 127ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details