தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிடி உஷாவின் 40 ஆண்டுகால சாதனை சமன்! ஆசிய விளையாட்டில் ஜொலிக்கும் தமிழக வீராங்கனை! - விளையாட்டு செய்திகள்

Asian games 2023: ஆசிய விளையாட்டில் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி. உஷாவின் 40 ஆண்டுகால தேசிய சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் சமன் செய்தார்.

Asian games 2023: 400 மீ தடை ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்த கோவை வீராங்கனை வித்யா ராம்ராஜ்!
Asian games 2023: 400 மீ தடை ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்த கோவை வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 1:55 PM IST

ஹாங்சோ: ஆசிய விளையட்டு போட்டியில் நடந்த ஆண்களுக்கான டெகாத்லானில், 2 போட்டிகள் மட்டும் எஞ்சியிருந்த நிலையில், ஷாட் புட்டில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர், நடப்பு தொடருக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்து உள்ளார்.

கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற 24 வயதான தேஜஸ்வின் சங்கர், ஆசிய விளையாட்டு தொடரின் ஷாட் புட் போட்டியில் 13 புள்ளி 39 மீட்டர் தூரம் எறிந்து 5வது இடத்தை பிடித்து உள்ளார்.

அதேபோல் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 11.12 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து 4வது இடத்தை பிடித்த அவர் நீளம் தாண்டுதலில் 7.37 மீட்டர் தாண்டி முதலிடத்தை பிடித்து உள்ளார். தற்போது தேஜஸ்வின் மொத்த தரவரிசையில் 2 ஆயிரத்து 428 புள்ளிகளுடன் உள்ளார். இவர் உயரம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் மீதமுள்ள நிலையில், அதில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதி.

இதையும் படிங்க: Cricket World Cup 2023: இலங்கை அணியில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய வீரர்கள்!

அதேநேரம் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நட்சத்திர வீராங்கனை பி.டி உஷாவின் சாதனையை தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சமன் செய்து சாதனை படைத்து உள்ளார். 1984 ஆம் ஆண்டு நடந்த 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி. உஷா 55.42 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து இருந்தார்.

இந்நிலையில் ஆசிய விளையாட்டில் நடந்த மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த வித்யா ராம்ராஜ் என்பவர் 55.42 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து நேரடியாக பெண்களுக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்ற இந்திய வீராங்கனை ரவி சிஞ்சல் காவேரம் தீதரமடா 58.62 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

ஆடவருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில், சந்தோஷ் குமார், தமிழரசன் மற்றும் யஷஸ் பலக்ஷா ஆகியோர் 49.28 மற்றும் 49.61 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் சந்தேஷ் ஜெஸ்ஸி மற்றும் சர்வேஷ் அனில் குஷாரே ஆகியோர் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

குரூப் ஏ மற்றும் குரூப் பி தகுதிச் சுற்றில் சந்தேஷ் மற்றும் சர்வேஷ் ஆகியோர் ஆறாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கான 800 மீட்டர் ஹீட் சுற்று போட்டியில், முகமது அப்சல் புலிக்கலக்கத் 1:46:79 விநாடிகளிலும், கிருஷ்ணன் குமார் 1:49:45 விநாடிகளில் இரண்டாவது இடத்தை பிடித்து, இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதையும் படிங்க: Cricket World Cup 2023: இலங்கை அணியில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details