டெல்லி:கடந்த ஆண்டு சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், தெற்கு பெங்களூரு பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் அவசர கதவை திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இதனை நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாதங்களாக முன்வைத்தன. இதற்கு பதிலளித்து பேசிய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், “இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் சமர்பித்த அறிக்கையின்படி, கடந்த 2022 டிசம்பர் 10 அன்று தேஜஸ்வி சூர்யா 6E-7339 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார்.