தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தேர்தலில் நிதிஷ்குமார் பண பலம், கூட்டணியால்தான் வென்றார்!' - தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிகார் தேர்தலில், நிதிஷ்குமார் பணம், கூட்டணியால் மட்டுமே வென்றார் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

Tejashwi Yadav
Tejashwi Yadav

By

Published : Nov 12, 2020, 6:04 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கான முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (நவ.11) வெளியிட்டது. அதில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ - என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில், "பிகார் தேர்தலில் ஆளும் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வென்றது. அக்கட்சியின் கூட்டணியில் இருந்த பாஜக 74 இடங்களில் வென்றுள்ளது.

அதனடிப்படையில் அவர், மூன்றாவது இடத்தில்தான் உள்ளார். அதை மனத்தில் வைத்துக்கொண்டால் நாற்காலியை கைவிடு வேண்டும். ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். இந்தத் தேர்தலில் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி பணம், கூட்டணியால் மட்டுமே வென்றார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜேடியு-பாஜக கூட்டணி 15 ஆண்டுகளாக செய்தது என்ன? மோடியிடம் தேஜஸ்வி யாதவ்

ABOUT THE AUTHOR

...view details