ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் காதியில் உள்ள ஜகோடாவை சேர்ந்தவர் ஆசாராம் குர்ஜார் (35). இவர் வட்டாட்சியராக பணியாற்றிவந்தார். அண்மையில் கரௌலி மாவட்டத்தின் மசல்பூர் தாலுகாவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு முன்பே பல முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதன்காரணமாக அவர் மன உளைச்சளில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது உடல் தோல்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
தொடர் பணியிடமாற்றம் - வட்டாட்சியர் தற்கொலை - பணியிடமாற்றம் காரணமாக தற்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர் பணியிடமாற்றம் காரணமாக வட்டாட்சியர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், தோல்பூரில் உள்ள வனப்பகுதியில் குர்ஜார் உடல் கிடந்துள்ளது. அருகிலுள்ள விவசாயிகள் அளித்த தகவலின் அடிப்படையில் உடலை மீட்டோம். முதல்கட்ட தகவலில் தற்கொலை என்பது தெரியவந்துள்ளது. அவரது உறவினர்களிடம் விசாரித்துவருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே குர்ஜாரின் உறவினர்கள் அவரது உயிரிழப்புக்கு பணியிடமாற்றமே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:டிஜே பார்ட்டியால் விபரீதம்... ஓடும் காரில் மாடல் அழகி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... சக மாடல் அழகி செய்த சதி அம்பலம்...