பால்கர்: மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 16ஆம் தேதி இரவு, 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய எட்டு பேர் கொண்ட கும்பல், கடற்கரை கிராமத்தில் உள்ள பங்களாவுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு கடற்கரைக்கு கொண்டு வந்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.
16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 8 பேர் கைது - பாலியல் வன்கொடுமை எட்டு பேர் கைது
மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
Teenage
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இன்று(டிச.18) காலையில் வழக்கில் சம்மந்தப்பட்ட எட்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனைவியை துண்டாக வெட்டிய கணவன்.. ஜார்க்கண்டில் கொடூரம்..