போபால்:மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத் நகரை சேர்ந்த யூடியூப் பிரபலமான 16 வயது சிறுமி, பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியனார். இந்த சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
சிறுமியின் புகைப்படத்தை அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இடார்சி ரயில் நிலையத்தில் குஷிநகர் எக்ஸ்பிரசில் சிறுமியை ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு சிறுமியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சிறுமி "பிண்டாஸ் காவ்யா" என்ற யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில், 44 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.