தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பைக் சாகசம்- சாலையில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு... - ஆந்திரா

த்ரில்லுக்காக பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய இளைஞன் 15 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கவுரி சாய்கிருஷ்ணா
கவுரி சாய்கிருஷ்ணா

By

Published : Nov 22, 2022, 12:24 PM IST

கிருஷ்ணா:ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள உய்யுர் பகுதியை சேர்ந்தவர் கவுரி சாய் கிருஷ்ணா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணா, 8ஆம் வகுப்புடன் தன் பள்ளி படிப்பை நிறுத்திய நிலையில், அதேபகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் பணியில் சேர்ந்துள்ளார்.

பைக் ஸ்டண்ட்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் கிருஷ்ணா, உள்ளூர் ரேசர்களுடன் இணைந்து அபாயகரமான முறையில் பைக் ரேஸிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். போலீசார் பலமுறை வார்னிங் கொடுத்த நிலையில், பெற்றோர் தரப்பிலும் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுக் கூடாது என சாய் கிருஷ்ணாவை அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விஜயவாடா நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் சேர்ந்து சாய் கிருஷ்ணா பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளான். இதில் பைக்கில் இருந்து தவறி விழுந்து தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டான்.

மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளித்த போதும் கிருஷ்ணா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 15 நாட்களாக உயிருக்கு போராடி வந்த சாய் கிருஷ்ணா, இறுதியில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையும் படிங்க:Google Pay, PhonePe-யில் விரைவில் பரிவர்த்தனை உச்ச வரம்பு - NPCI திட்டம்

ABOUT THE AUTHOR

...view details