தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிவியை ஆஃப் செய்த தாய்: விரக்தியில் மாணவன் தற்கொலை - Teen hangs self in Beed

பீட்: தாய் டிவியை ஆஃப் செய்ததால் விரக்தியடைந்த 19 வயது மாணவர் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother switches off TV Teen hangs self
மாணவன் தற்கொலை

By

Published : Apr 4, 2021, 7:21 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் வக்கீல்வாடியைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர், ஆன்லைன் வகுப்பு நிறைவடைந்த பின்னர் டிவி பார்த்துள்ளார். அப்போது அவரது தாய், ஒழுங்கான முறையில் அமர்ந்தபடி, அந்த நிகழ்ச்சியை கண்டு ரசிக்கக் கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர் படுத்திருந்தபடியே பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய், டிவியை ஆஃப் செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த மாணவர், குளியலறையில் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

வெகுநேரமாகியும் மாணவர் வெளியே வராததால், மாணவரின் சகோதரியும், தாயாரும் குளியலறையை பார்க்கும் போது மாணவனின் விபரீத முடிவு குறித்து தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details