ஹைதராபாத்: பிப்ரவரி மாதம் பிறந்தாலே இளைஞர்கள் மனது சிறகடிக்கும் பட்டாம் பூச்சி போலத் தான் சுற்றித் திரியும். வேலன்டைன்ஸ் டே(valentine's டே) பிப்ரவரி 7ல் தொடங்கி 14 வரை களைகட்டும். அதாவது பிப்ரவரி இரண்டாம் வாரம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாகத் தான் இருக்கும். ரோஸ் டே, பிரப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே கடைசியில் வேலன்டைன்ஸ் டே என ஒவ்வொரு நாளும் ஒரு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த தினத்தில் காதலர்கள் மட்டுமின்றி கடைக்காரர்களும் அதிக வசூல் காரணமாக ஆனந்தத்தில் இருப்பார்கள்.
தற்போது ரோஸ் டே, பிரப்போஸ் டே அந்த வரிசையில் (பிப். 10) நான்காம் நாளான இன்று டெடி டே கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் முழுவதும், தம்பதிகள் தங்கள் அன்பை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தும் வகையில் ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே என்று சிறப்பாகக் கொண்டாடினர், இன்று டெடி டே. பெண்களுக்கு பிடித்தமான ஒன்றில் இந்த டெடியும் இணையும். இந்த கரடி பொம்மையைக் கரடி எனக் கூறினால் கூட பெண்களுக்கு கோபம் வரும். அந்த அளவிற்கு அவர்களுக்கு இதன் மேல் அவ்வளவு ஈடுபாடு. தற்போது உள்ள தலைமுறைகள் தூங்கும் போது காற்றாடி இல்லாமல் கூட தூங்கிவிடுவார்கள் டெடி இல்லாமல் தூங்குவது இல்லை. அப்படி என்ன தான் இருக்கும் என்று தெரியவில்லை.
உங்கள் இதயத்திற்கு பிடித்தமான தோழிக்கு அவர்களுக்கு பிடித்தமான டெடியை கொடுத்து மகிழ்விக்கும் விதமாக இந்த நாளை கொண்டாடுங்கள். டெடி என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பரிசு. தனது மனதில் உள்ளதை மறை முகமாகக் கூற இதை பயன்படுத்தி கொள்ளலாம். இது பல வண்ணங்களில் பல விதமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது உங்கள் அன்புக்குரியவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்க போதுமானது. நீங்கள் உங்கள் துணைக்குக் கரடி பொம்மையை பரிசளிக்க திட்டமிட்டிருந்தால், இந்த சிறப்பு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்...