ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்ட நவோன்மேஷ் பிரசார் அறக்கட்டளை ஆரம்பித்த நாப்சாட் குழுவில் இடம்பெற்றுள்ள விண்வெளி ஆர்வலர்கள், விண்வெளி அமைப்புகள், ரோவர்கள், ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு போன்ற பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த அறக்கட்டளை சார்பில் 10 பள்ளி மாணவர்கள்,ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ் (Human Exploration Rover Challenge) போட்டியில் கலந்து கொள்ள செல்கின்றனர்.
இதுகுறித்து நவோன்மேஷ் பிரசர் அறக்கட்டளையின் நிறுவனர் அனில் பிரதான் கூறுகையில், "நாசாவின் ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ்சில் பங்கேற்க இந்தியாவிலிருந்து ஒரு பள்ளி குழு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். கோவிட் காலத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 10 மாணவர்கள் கொண்ட குழுவை உருவாக்கி நன்கு பயிற்சி அளித்தோம்.பின்னர் நாசாவின் ரோவர் சவாலுக்கு விண்ணப்பித்தோம்.இந்த சேலஞ்சில் பள்ளி மாணவர்களும் நிகராக ஐ.டி.ஐ மாணவர்களும் உள்ளனர்.
நிச்சயமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் செல்லக்கூடிய ரோவரை உருவாக்குவோம். ஏப்ரலில் நடைபெறவுள்ள நாசா செலஞ்சில் எங்களில் ரோவர் மற்ற அணிகளுடன் போட்டியிடுவோம். எங்களின் ரோவர் குறைந்தபட்சம் இரண்டு நபர்களின் எடையை தாங்கும் வகையில் தயாரிப்போம்" எனத் தெரிவித்தார்.