தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அன்பும் அறிவும் அள்ளிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான நாள்

இந்தியா முழுவதும் இன்று(செப் 5) மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

Etv Bharatஉலகம் இயங்க உதவும் ஆசான்களின் தினம் இன்று
Etv Bharatஉலகம் இயங்க உதவும் ஆசான்களின் தினம் இன்று

By

Published : Sep 5, 2022, 10:35 AM IST

Updated : Sep 5, 2022, 10:51 AM IST

இந்தியாவில் 1,888ஆம் ஆண்டில் பிறந்து நாட்டின் 2ஆவது குடியரசுத் தலைவராகவும், போற்றுதலுக்குரிய ஆசிரியராகவும் பணியாற்றி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. 1962 முதல் இந்த நாளை கொண்டாடி வருகிறோம். இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பல்வேறு நாடுகளில் அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் நமக்கு கற்பிப்பது அல்ல. ஒழுக்கம், பண்பு, பொது அறிவு, ஆன்மிகம், நன்னெறி என அனைத்தையும் எடுத்துத்துரைத்து நம்மை சிறந்த மனிதராக்கும் உன்னத பணி ஆசிரியர் பணி. அப்படிப்பட்ட பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராகக் கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக உள்ளவர்கள்தாம் நம் ஆசிரியர்கள்.

மாணவர்களைத் தன்னுடைய குழந்தைகளாகப் பார்க்கும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் ஆசிரியர்கள்தாம். ஒரு மாணவனை பண்படுத்தி அவரை இந்தச் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாற்றுகின்ற அறப்பணியே ஆசிரியரது உயர்ந்த பணி. உலகளவில் பொதுவாக அக்டோபர் 5ஆம் தேதியும், பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாள்களிலும் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கல்வி குறித்த மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையும், கல்வி குறித்தான சிறந்த நிகழ்வுகளையும் எடுத்தியம்புகிறது.

'ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி' - வேறு எந்தப் பணிக்கும் (சேவை) கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்தச் சொல்லாடலே சான்று. அவர்களுக்கு இந்த நாளில் நாம் மரியாதை செய்வோம். ஆசியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் நாள் வாழ்த்துகள். ஒவ்வொரு ஆசிரியர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்.

இதையும் படிங்க;தமிழ்நாட்டில் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

Last Updated : Sep 5, 2022, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details