தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாற்காலியில் கைவத்த மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் - கரேலா காவல் நிலையப் பகுதியின் சலுவா கிராமம்

மத்திய பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் நாற்காலியில் கை வைத்ததற்காக மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatமத்திய பிரதேசம்: நாற்காலியில் கைவத்த மாணவனை  அடித்த ஆசிரியர்
Etv Bharatமத்திய பிரதேசம்: நாற்காலியில் கைவத்த மாணவனை அடித்த ஆசிரியர்

By

Published : Dec 20, 2022, 9:36 AM IST

பேபால்:மத்தியப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் நாற்காலியை தொட்டதற்காக 2ஆம் வகுப்பு மாணவனை அந்த பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை அறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த சம்பவம் நேற்று (டிசம்பர் 19) நடந்துள்ளது. சலுவா கிராமத்தில் வசிக்கும் அமர் சிங் ஸ்ரீவாஸின் ஏழு வயது மகன் சுரேஷ் சிங் ஸ்ரீவாஸ் அக்கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கிறார். பள்ளியில் உள்ள ஆசிரியரின் நாற்காலியில் கை வைத்ததற்காக அவர் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தபோது விவகாரம் வெளியில் வந்தது.

இதையும் படிங்க:கடந்த 15 மணிநேரத்தில் 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details