உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜான்பூர் மாவட்டத்தில் முங்க்ரா பாட்ஷாபூரில் வசிக்கும் இளம் பள்ளி ஆசிரியையான சுவாதி குப்தாவிற்கு ஏப்ரல் 30 அன்று திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், அவருக்கு புலந்த்ஷாஹரில் நடந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான பயிற்சியின்போது நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உ.பியில் கரோனாவால் உயிரிழந்த இளம் ஆசிரியை! - உ.பி கரோனா
உ.பி.யில் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பள்ளி ஆசிரியை கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
உ.பியில் கரோனா பாதிப்பால் இறந்த பள்ளி ஆசிரியை
பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
இதைத்தொடர்ந்து, தேர்தல் கடமையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள கோரி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஏப்ரல் 15 வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்பு, அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சைக்காக மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அப்போது, சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் 23 அன்று, உயிரிழந்தார்.