தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுமியை பாலியல் கொடுமை செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை - Puducherry state news

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம்
புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம்

By

Published : Aug 11, 2021, 9:12 AM IST

புதுச்சேரி: சண்முகாபுரம் தெற்கு பாரதிபுரம் நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அன்பு மகன் ரஞ்சித்குமார் (27). இவர் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு டியூஷன் படிக்க வந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று (ஆகஸ்ட்10) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ரஞ்சித் குமாருக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டது.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: பட்டியலின சமூகத்தினரின் வீடுகள் அழிப்பு... போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details