சிகார்:ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள பள்ளியில், ஆசிரியர் மாணவனை கொடூரமாகத் தாக்கியதால், முதுகில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக மாணவனும்; அதே நேரத்தில், மாணவன் தன்னை தாக்கியதாக ஆசிரியரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக ஆசிரியர் மற்றும் மாணவரின் குடும்பத்தினர் காவல்துறையிடம் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
பள்ளியில் சரியாக வரிசையில் நிற்காததால் பள்ளி மாணவன் ஒருவரை ஆசிரியர் தண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சண்டையாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர் மாணவனை அறைக்கு அழைத்துச்சென்று, அங்கு அவரை அடித்ததால், எல்லா இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.