கான்பூர்(உத்திரப்பிரதேசம்):Tax evasion in UP: உத்திரப்பிரதேசத்தில் வருமான வரித்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.150 கோடி வரி ஏய்ப்பு செய்த இரண்டு தொழில் அதிபர்கள் சிக்கியுள்ளனர்.
இந்தத் தொழில் அதிபர்களின் வீடு, தொழிற்சாலை, அலுவலகம் மற்றும் பெட்ரோல் பங்குகள் எனப் பல இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை நடந்தது. இதில் ரூ.150 கோடி கறுப்புப் பணம் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அகமதாபாத் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தின் அலுவலர்கள் வியாழக்கிழமை கான்பூரில் உள்ள தொழிற்சாலை வளாகம், பான் மசாலா உற்பத்தியாளர் மற்றும் ஒரு டிரான்ஸ்போர்ட்டருக்குச் சொந்தமான (அவரது அடையாளம் காணப்பட்ட) இடங்களில் சோதனையைத் தொடங்கினர்.
பணம் எண்ணும் இயந்திரத்துடன் நிறுவனங்களில் ஆஜரான அலுவலர்கள்
இதுவரை, இ-வே பில்களை (Eway Bill)உருவாக்காமல், போலி விலைப்பட்டியல்களின்கீழ், சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தி உள்ளனர்.
வருமான வரித்துறையினர் முதலில் பணத்தை எண்ணும் இயந்திரத்துடன் ஆனந்தபுரி நகரில் உள்ள பியூஷ் ஜெயின் இல்லத்தை அடைந்தனர். மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள ஜெயின் நிறுவனங்களிலும் இதே போன்ற சோதனைகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், 'சுமார் ரூ.150 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வரி ஏய்ப்பு முக்கியமாக போலியான நிறுவனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
பியூஷ் ஜெயின் ஆனந்தபுரியில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னோஜில் உள்ள சிப்பட்டி ஆகும். கன்னோஜில் அவருக்குச் சொந்தமாக வீடு, வாசனை திரவிய தொழிற்சாலை, குளிர்பானக் கடை, பெட்ரோல் பம்ப் ஆகியவை உள்ளது.
மும்பையில் பியூஷ் ஜெயின் வீடு, தலைமை அலுவலகம் மற்றும் ஷோரூம் ஆகியவற்றையும் வைத்திருக்கிறார். அவரது நிறுவனங்களும் மும்பையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோதனைக் குழுக்கள்