தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏர்ஏசியா இந்தியாவின் பெருமளவு பங்குகளை கைவசப்படுத்தும் டாடா! - ஏர் ஏசியா இந்தியா நிறுவனம்

தன் கைவசம் உள்ள ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் பங்குகளை 83.67 விழுக்காடாக உயர்த்த டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டாடா குழும தலைவர் டாடா குழும தலைவர் ரத்தன் டாடாரத்தன் டாடா
டாடா குழும தலைவர் ரத்தன் டாடா

By

Published : Dec 29, 2020, 8:08 PM IST

மும்பை:ஏர் ஏசியா இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட்டிடம் இருந்து, ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 37.66 மில்லியன் மதிப்புடைய 36.67 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்தி, டாடா நிறுவனம் தனது பங்கினை 83.67 விழுக்காடாக உயர்த்தவுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியாவின் கிளை நிறுவனமான ஏர் ஏசியா இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் தற்போது 49 சதவிகித பங்குகளை தனது வசம் வைத்துள்ளது.

புர்சா மலேசியா பங்கு சந்தை ஒழுங்குமுறை தாக்கலின்போது ஏர் ஏசியா நிறுவனத்தினர் கூறுகையில், " ஏர் ஏசியா இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் பங்குகளை வாங்கும் ஒப்பந்தங்களில் நுழைந்துள்ளன என்பதை அறிவிப்பதில் ஏர் ஏசியா இயக்குநர்கள் வாரியம் மகிழ்ச்சி கொள்கிறது" என்றனர்.

அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பான 49 விழுக்காடு மூலம் மலேசியாவின் ஏர் ஏசியாவுடன் இணைந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவில் ஏர் ஏசியா இந்தியா விமான சேவையை டாடா நிறுவனம் வழங்கி வருகிறது.

இதையும் படிங்க:ஸ்கோடா நிறுவன கார் விலை ஜனவரி முதல் உயர்வு

ABOUT THE AUTHOR

...view details