டெல்லி:ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் 50 விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வந்தது.
குறைந்தபட்ச விலையாக 15 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடிவரை அரசு விலையை தீர்மானித்திருந்த நிலையில், டாட்டா குழுமம், ஸ்பைஸ்ஜெட்டும் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்திருந்தனர்.
இந்தச்சூழ்நிலையில், டாடா நிறுவனம் ஒப்பந்தத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் 1953 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டது. தற்போது, ஏலத்தில் டாடா வென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் ஏர் இந்தியா டாடாவிடம் செல்லவிருக்கிறது.