மத்திய நிதியமைச்சகத்தில் முக்கிய நிர்வாக மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக இருந்த தருண் பஜாஜ் வருவாய் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வருவாய் துறையின் கீழ்தான் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நேரடி, மறைமுக வரிகளுக்கான துறைகளும் வருவதால் இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பொருளாதார விவகாரங்களுக்கான புதிய செயலராக அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பெங்களூரு மெட்ரோவின் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிவருகிறார்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான செயலராக அலி ராசா ரிஸ்வி, மாற்றுத்திறனாளிகள், சமூகநீதி மேம்பாட்டுத் துறை செயலராக அஞ்சலி பார்வா, பழங்குடி விவகாரங்களுக்கான செயலராக அனில் குமார் ஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:அனில் தேஷ்முக் வழக்கு: உச்ச நீதிமன்றம் செல்லும் மகாராஷ்டிரா அரசு