டெல்லி : ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றப்பட்டுள்ள விவகாரம் ஏன் எனக் கேள்வியெழுப்பிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர், “மோடி அரசாங்கம் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ராஜிவ் காந்தி நாட்டின் பிரதமராக இருந்தவர். விளையாட்டு வீரர்களுடன் உணர்வுப்பூர்வமான உறவு கொண்டிருந்தார். அவரின் பங்களிப்பை நாடு ஒருபோது மறவாது” என்றார்.
தொடர்ந்து, ராஜிவ் காந்தி கேல் ரத்னா, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதாக மாற்றப்பட்டது குறித்து பேசுகையில், “மோடி அரசாங்கம் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என மாற்றியிருப்பதற்கு பதிலாக புதிய விருது ஒன்றை அறிவித்திருக்க வேண்டும்.