தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வழி தவறியதால் நேர்ந்த துயரம் - 3 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த பெண்!

மூன்று ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியால் தற்போது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.

tamilnadu-nalini-met-her-family-at-koilwar-mental-hospital
tamilnadu-nalini-met-her-family-at-koilwar-mental-hospital

By

Published : Mar 12, 2022, 3:44 PM IST

பீகார் மாநிலம் போஜ்பூரில் உள்ள கோயில்வார் மனநல மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டை சேர்ந்த நளினி என்ற பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியால் பிரிந்த தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.

நளினி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் இந்தி பேசவோ,பேசுவது புரியவோ தெரியாது. இதற்கிடையில், மரிவாலா ஹெல்த் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பு நளினியுடன் உரையாடுவதற்கும் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கும் தமிழ் பேசும் ஒருவரை நியமித்தது.

பின்னர்,நளினி கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம் அவர் தவறான வாகனத்தில் ஏறி பீகார் வந்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் தமிழ்நாடு காவல்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரித்தது.

இந்த தகவலில் அடிப்படையில் சேலத்தில் காணாமல் போன பட்டியலை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். நளினி குடும்பத்தினர் நளினி காணாமல் போனதாக காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து, புகாரளித்திருந்த நளினி குடும்பத்தினரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு நளினியை ஒப்படைத்தனர். பின்னர், நளினி குடும்பத்தினருடன் சேர உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மூன்று வருடங்களுக்கு முன் காணமல் போன பெண் தற்போது குடும்பத்துடன் சேர்ந்த சம்பவம் நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கோகுல்புரி குடிசை பகுதிகளில் தீ விபத்து.. 7 பேர் உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details