இந்தியாவில் கரோனா 2ஆம் அலை பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ. 533 கோடி ஒதுக்கீடு! - இந்தியா கொரோனா
10:55 May 09
கரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு பணிக்காக 25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 533.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகப்பட்சமாக உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு 1,441.6 கோடி ரூபாயும், அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 861.4 கோடி ரூபாயம் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த அளவில், சிக்கிம் மாநிலத்திற்கு 6.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.