தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், நாட்டின் மிகப்பழமையான தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, 832 கோடி ரூபாய் முதலீடு திரட்டுவதற்காக, 1.58 கோடி பங்குகளை நேற்று (செப்.5) வெளியிட்டது.
ஒரு பங்கு, 510 ரூபாய் முதல் 525 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. முதல் நாள் முடிவில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ 83 சதவீத சந்தாவைப் பெற்றது. இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று(செப்.6) தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஐபிஓ 100 சதவீத சந்தாவை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.