தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள்’ - தமிழிசை - புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் உலக மனநல நாளையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழிசை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

World Mental Health Day  tamilisai  governor tamilisai  tamilisai talks about world World Mental Health Day  puducherry news  puducherry latest news  புதுச்சேரி செய்திகள்  தமிழிசை சௌந்தரராஜன்  புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  உலக மனநல தினம்
தமிழிசை

By

Published : Oct 10, 2021, 1:20 PM IST

புதுச்சேரி: உலக மனநல நாளையொட்டி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (அக்.10) நடைபெற்ற பேரணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும், சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மனதுக்கு பயிற்சி

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, “நாம் உடலை பேணுகிற அளவிற்கு மனதை பேணுவது இல்லை. மனதையும் பேணவேண்டும். உடலுக்கு பயிற்சி போன்று மனதுக்கும் பயிற்சி கொடுத்து பாதுகாக்க வேண்டும்.

கரோனா நேரத்தில் மனநல பாதிப்பு உலக அளவில் அதிகமாக இருக்கிறது. பலர் தமக்கு நெருக்கமானவர்களை இழந்திருக்கிறார்கள். பலர் தாமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மிக அவசியம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை நாம் காதுகொடுத்து கேட்கவேண்டும்.

மனதுக்குப் பயிற்சி கொடுத்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது மனநல பாதிப்பில் இருந்து விடுபடலாம். அதேபோல மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: உலக மனநல தினம் இன்று!

ABOUT THE AUTHOR

...view details