தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இன்று கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். காலை 9 மணிக்கு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் (ராஜ்நிவாஸ்) பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைப்பதாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நிவாஸில் கிரண்பேடியைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட தமிழிசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று புதுச்சேரி வந்த தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஜ்நிவாஸில் நாராயணசாமி, ரங்கசாமி ஆகியோரின் வரவேற்பையும், வாழ்த்துகளையும் பெற்ற தமிழிசை புதுச்சேரியில் இதுவரை நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பேரவையில் ஆளும் காங்கிரஸ் 14 இடங்கள், எதிர்க்கட்சி 14 இடங்கள் என இரண்டும் சம பலத்தில் உள்ளன.
இதனால் அறுதிப்பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்களுக்கும் குறைவாக காங்கிரஸ் இருப்பதால் ஆட்சியில் நீடிப்பதில் ஆபத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழிசையின் நியமனம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புதுச்சேரியில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை சொல்வாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.