தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் - தமிழிசை சௌந்தரராஜன்

தடுப்பூசி விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

By

Published : Sep 7, 2021, 3:55 PM IST

புதுச்சேரி:லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரியில் கோவிட் நினைவு தோட்டம் மற்றும் திறந்தவெளி வகுப்பறை ஆகியவற்றை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (செப்.7) தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியின்போது கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

பின்னர் மாணவர்களிடம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், "புதுச்சேரி பசுமையாக மாறும். தாகூர் கலைக் கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டு பசுமையாக மாற்றியுள்ளார்கள். இந்த வளாகம் அனைத்து கல்லூரி வளாகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்

மாணவர்கள் மரம் நட முக்கியத்துவம் கொடுப்பது போல் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 3ஆவது அலையை தடுக்க வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

திறந்தவெளி வகுப்பறை

கரோனா அல்லாத வளமான புதுச்சேரியை நாம் உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்" என்றார்.

கோவிட் நினைவு தோட்டம்

இதையும் படிங்க:விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊக்கத்தொகை

ABOUT THE AUTHOR

...view details