புதுச்சேரி:இந்திய விமானப்படையின் சார்பாக 1971இல் பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்று ஐம்பதாவது ஆண்டு நினைவு தினம், நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினம், தடுப்பூசி ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை முன்வைத்து இந்திய விமான படை வீரர்கள் ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் தூரம் என விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த சைக்கிள் பயணத்தை புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டம்
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முடியவில்லை. இப்போது அக்டோபர் 5ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
இத்திட்டம் வெற்றிபெற வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடாவிட்டால், சான்றிதழ் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.