புதுச்சேரி: பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த கனமழையை ஒட்டி ஊசுடு ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழிசை, இன்று ஊசுடு ஏரி, பிள்ளையார்குப்பம் அணைக்கட்டுப் பகுதியைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து நீரை தேக்கிவைப்பதற்கும், ஊசுடு ஏரியைப் பராமரிப்பதற்கும் அரசு எடுத்துவரும் முயற்சிகளை பொதுப்பணித் துறைச் செயலர் விக்கிரந் ராஜா எடுத்துரைத்தார்.
புதுச்சேரி ஏரிகளைப் பார்வையிட்ட தமிழிசை பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழிசை, 120 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையில் சில குறைபாடுகள் இருப்பதால் விரைவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
புதுச்சேரி ஏரிகளைப் பார்வையிட்ட தமிழிசை மேலும், கரோனா அச்சம் முழுவதுமாக விலகிய பின்னர் புதுச்சேரியை நல்ல சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க:குடும்ப அட்டைக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம்