புதுச்சேரி மாநிலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 243 கோயில்களின் தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை முறையை பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு, அதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தை துணை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேற்று (மே.19) தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளத்திலிருந்து மக்கள் 243 கோயில் நிர்வாகத்தின் வரவுகள், செலவுகள், பூஜைகள், திருவிழாக்கள் அசையும், அசையா சொத்துக்களின் விவரங்கள், நன்கொடைகள், திருப்பணிகள் , விதிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்வதுடன் சுவாமிகளின் தரிசனம், பூஜைகள் விழாக்களை http ://hri.py.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.