புதுச்சேரி: கர்மவீரர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதே போன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், நாடளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன்
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அண்ணாசாலையில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநர்
இதையும் படிங்க: காமராஜர் பிறந்தநாள்: மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்