குஜராத்:தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்த ஓர் கும்பல் மடிக்கணினி, அலைப்பேசி போன்றவற்றை வடோடரா நகரத்திலுள்ள வீடுகளில் திருடி வந்துள்ளனர். இதைக் கண்டறிந்த வடோடரா மாவட்ட காவல்துறையினர் இக்கும்பலைத் தேடிய போலீசார் இன்று (அக்.20) அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த சுமார் ரூ.4.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, இந்தக் கும்பல் குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததும் அவர்களை வடோடராவில் வைத்துப் பிடித்தனர். பிடிபட்ட அந்தக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்ததோடு, இவர்கள் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பன போன்ற பலகோணங்களில் விசாரித்து வருகின்றனர்.